சினிமா செய்திகள்
நானி-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தசரா படத்தின் 3-வது பாடல் வெளியீடு
சினிமா செய்திகள்

நானி-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'தசரா' படத்தின் 3-வது பாடல் வெளியீடு

தினத்தந்தி
|
8 March 2023 7:31 PM IST

‘தசரா’ படத்தில் இருந்து 'மைனரு வேட்டிக்கட்டி' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, 'அடடே சுந்தரா' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த படத்தில் இருந்து இதுவரை 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், 3-வது பாடலான 'மைனரு வேட்டிக்கட்டி' என்ற பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.



மேலும் செய்திகள்